சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை (காணொளி இணைப்பு)!!

59

நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது. விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான் நிகழ்த்திய எழுச்சி உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி: த. தெட்சிணாமூர்த்தி

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா (நிழற்படங்கள் இணைப்பு)!!
அடுத்த செய்திஅடையாளத்தை தொலைத்து நிற்கும் சோழ மாமன்னனின் கல்லறை (நிழற்ப்படம் மற்றும் காணொளி இணைப்பு)!!