நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா (நிழற்படங்கள் இணைப்பு)!!

35

நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது.

விழாவில் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மகளிர் பாசறை அமுதாநம்பி, மனித உரிமைப் போராளி பேராசிரியர் பால் நியுமன், இனமான இயக்குனர் மணிவண்ணன், இனமான இயக்குனர் அண்ணன் ர.க.செல்வமணி, திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தென்றல். சந்திரசேகர், மதுரை மாவட்ட பொறுப்பாளர் வெற்றிக்குமரன், கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் அமைப்பாளர் ஐந்து கோயிலான், இளைஞர் பாசறையின் தளபதி பாலமுரளிவர்மன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோட்டை குமார், தஞ்சை மாவட்ட தளபதி சட்டதாரணி. நல்லதுரை, ஊடகத்துறை செயலாளர் அய்யநாதன், இதழாளர் அரப்பா, மூத்த வழக்கறிஞர் அண்ணன் தடா. சந்திரசேகர், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் அண்ணன் கலைகொட்டு உதயம் மற்றும் பல உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வினை சிறப்பாக முன்னின்று நடத்தியவர்கள்/உழைத்தவர்கள்:
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், புகழேந்தி, நெய்வேலி ரமேசு, பிரபு, சிவசங்கரன், வழக்கறிஞர் ராஜசேகரன், தென்றல் மணி, சபாபதி, அன்புச்செல்வன், அருண் மற்றும் பலர்.

மாணவர் பாசறைப் பொறுப்பேற்றுள்ள தளபதிகள்:
தமிழ் ஈழம், சைலேந்தர், தேவா, தனு

 

 படங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

 

 

 

 

 

 

நன்றி: ராசகுரு

முந்தைய செய்திவேலூர் நாம் தமிழர் பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டு நிகழ்வு (நிழற்படங்கள் இணைப்பு)!!
அடுத்த செய்திசிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை (காணொளி இணைப்பு)!!