இந்தியாவின் அவசர செய்தியை அடுத்தே சீமானின் எல்லைக் கடவு மறுக்கப்பட்டது

447

Seeman-US
வெள்ளிக்கிழமை, 02 மார்கழி 201
நாம் தமிழர் கட்சியின் தலைமை நெறியாளர் திரு.சீமான் அவர்கள் இலங்கை தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை அமெரிக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பிய சம்பவம் அனைவரும் அறிந்ததே. புதுடில்லியில் இருந்து வந்த அவசர செய்தியை அடுத்தே தாம் திருப்பி அனுப்பியதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க குடிவரவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றின் செயற்குழு உறுப்பினருக்கு தெரிவித்துள்ளார்
‘திரு.சீமான் அவர்களுக்கு பன்முறை சென்று வரக்கூடிய பத்தாண்டுகள் செல்லுபடி ஆகும் அமெரிக்க எல்லைக் கடவு(விசா) தாம் வழங்கியது உண்மை. அது எமது நாட்டிடம் உள்ள பல்வேறு தகவல்களின் அடிப்படையின் கீழ் ஆராய்ந்து வழங்கப்பட்டது.
ஆனால் நமது நாடு தென்கிழக்காசியாவில் சீனாவின் ஆளுமையை விரும்பவில்லை. அதனால் இந்திய அரசுடன் நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்றில் உடன்பட்டுள்ளோம். அதன் அடிப்படையில் இருநாடுகளின் மேலாண்மை பாதுகாப்பதற்காக செய்திப்பரிமாற்றம் நடை முறையில் உள்ளது.
அதன் அடிப்படையிலே திரு.சீமான் அவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பது தொடர்பில் புதுடில்லியில் இருந்து அவரச செய்தி வந்தது. அதன் பின்புதான் அவரை திருப்பி அனுப்பினோம்.

திரு.சீமான் அவர்களின் அரசியல் நிலைப்பாடோ அன்றி அவரது நகர்வுகள் செயற்பாடுகளோ அமெரிக்காவுக்கு அச்சுறுத்தாலாக இல்லை.’ என அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்திய தலையீடுகளை ஊக்குவிப்பதில் அமெரிக்க இராசாங்கத் திணைக்களம் ஆர்வமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்துமாற் போன்று இவ்வாண்டு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டான ‘ஆசியான்’ கூட்டத் தொடருக்கு செல்லும் வழியில் சென்னை வந்த கெலரி கிளின்ரன் அம்மையார் அவர்களின் பேச்சும் அமைந்திருந்தது. அதேவேளை அமெரிக்க ஆய்வாளர்களும் தென்சீன கடலில் சீனாவுடனான பிரச்சினையில் இந்தியாவின் முக்கியதுவம் குறித்தே அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது எனக் குறிப்பிடுகின்றனர்.

நன்றி – முழக்கம் இணையத்தளம்
http://www.muzhakkam.com/muzhakkam/index.php?option=com_content&view=article&id=315:2011-12-04-05-20-33&catid=25:the-project&Itemid=27

முந்தைய செய்தி‘உச்சிதனை முகர்ந்தால்’ – மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லாவை அழவைத்த திரைப்படம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா…