கூடங்குளம் விவகாரத்தை திசைதிருப்புகிறது மத்திய அரசு: செந்தமிழன் சீமான் பேட்டி

64

இது பற்றி நக்கீரன் இணையத்தளத்தில் இன்று வந்த செய்தியாவது:

முல்லைப் பெரியாறு விவகாரத்தை தூண்டிவிட்டு கூடங்குளம் பிரச்னையை மத்திய அரசு திசைதிருப்புகிறது என நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் குற்றம்சாட்டினார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டு உள்ளதே அந்த அணை பலமாக உள்ளதை காட்டுகிறது.

ஆனால் கேரள அரசும் அங்குள்ள கட்சிகளும் சுயலாபத்துக்காக முல்லைபெரியாறு அணை பிரச்னையை கிளப்பி உள்ளனர். கேரள அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு தரவேண்டிய நீரையும் தரமறுக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை தமிழர்களால் தமிழ்நாட்டுக்காக கட்டப்பட்டது. ஆனால் கேரள அரசு நமது உரிமையில் தலையிட்டு அதுவும் உரிமை கொண்டாடுகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியாக உள்ளது.

ராஜபட்சே போர்குற்றவாளி என்று தமிழகத்தில் அனைவரும் கூறி வந்தனர். மேலும் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய போது மத்திய அரசு கூடங்குளம் பிரச்னையை ஆரம்பித்து மக்களை திசை திருப்பியது. தற்போது கூடங்குளம் பிரச்னை பெரிதானவுடன் முல்லைபெரியாறு அணை பிரச்னையை தூக்கி விட்டு கூடங்குளம் பிரச்னையை திசை திருப்புகிறது என தெரிவித்தார்.

முந்தைய செய்திகேரள எல்லையை நோக்கி 4-வது நாளாக மக்கள் பேரணி – காணொளி இணைப்பு
அடுத்த செய்திசிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான கேரளாவின் போக்கை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் – படங்கள் மற்றும் துண்டறிக்கை இணைப்பு