மூன்று தமிழர் உயிர்க்காக்க 3-11-11 அன்று கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பார்ட்டம்

35

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு தூக்கு கயிற்றின் முன் நிற்கும் முருகன், சாந்தன்,பேரறிவாளன் உள்ளீட்ட மூன்று தமிழர் உயிர் குடிக்கத்துடிக்கும் தமிழின விரோத மத்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழக மக்களின் உணர்வை மதித்து தமிழக அமைச்சரவையை உடனடியாக தமிழக முதல்வர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றக் கோரி மாநில அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியும், நாம் தமிழர் இளைஞர் பாசறையும் இணைந்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன.

இதன் தொடக்கமாக, 3.11.11 அன்று மாலை கோயம்புத்தூர் மத்திய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 7-11-2011 அன்று மாலை  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் காந்திப்பூங்கா அருகில்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்பார்ட்ட நிகழ்வுகளில் இளைஞர் பாசறையினரும், நாம் தமிழர் கட்சியினரும் திரளாக கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக நடக்க இருக்கின்ற ஆர்ப்பார்ட்டங்களில் கட்சியின் முதன்மை பொறுப்பாளர்கள், இளைஞர் பாசறை நிர்வாகிகள் ,மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

போர்க்குணத்துடன் குரல் கொடுத்து மூன்று தமிழரை கொல்லத் தொங்கும் தூக்கு கயிற்றினை அறுத்தெறிவோம். வாருங்கள் தாய்த் தமிழ் உறவுகளே..!

-வழக்கறிஞர்.மணி.செந்தில் என்ற திலீபன்,
வழக்கறிஞர்.ராசீவ்காந்தி என்ற அறிவுச்செல்வன்,
பேராசிரியர் கல்யாணசுந்தரம்
மாநில அமைப்பாளர்கள்,
இளைஞர் பாசறை, நாம் தமிழர் கட்சி.
முந்தைய செய்திகடலூர் மாவட்டம் தி்ட்டக்குடியில் மூன்று அண்ணன்மார்களின் விடுதலைக்கான தெருமுனை பிரச்சாரம்
அடுத்த செய்திஅணு உலை பாதுகாப்பு குறித்து முதல்வர் முழுமையான விளக்கம் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி