சேலம் மாவட்டம் நாம்தமிழர் கட்சின் இளைஞர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்

136

சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கக்  கோரியும் தூக்குதண்டணை     ரத்து செய்து வாழ்நாள் தண்டணையாக குறைக்க கோரியும் கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்றுகொண்டிருக்கும் மாபெரும் மக்கள் எழுச்சி  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் இளைஞர்  பாசறை சார்பாக மாபெரும் ஆர்பாட்டம் (6 .11 .2011 ) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சி.அருண் அவர்கள் தலைமையேற்றும் நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் தமிழர் திரு.பால்  நியூமன் அவர்களும், பெருந்தமிழர் பேராசிரியர் தீரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் சேலம் மாவட்டத்தின் நாம்தமிழர் கட்சியின் உறவுகள் பள்ளபட்டி இளந்தமிழர் சிவகுமார், வழக்குரைஞர் ராசா, அம்மாபேட்டை கண்ணன், பன்னீர்செல்வம்,கெங்கவல்லி ரமேசு,இணையம்சிவா,மாணவர் வினோத் கண்ணன்,மேட்டூர் மணிவேல்,புதுச்சாம்பள்ளி செயபிரகாசு,ஓமலூர் ரமேசு,ஆத்தூர் காசிமன்னன், தண்டபாணி,சித்தர் கோவில் ரஞ்சித்,கமலகண்ணன் சிந்தாமணியூர் சுதாகர்,பொட்டனேரிமதிவாணன்,கொளத்தூர் சேட்டு,களரம்பட்டி திருஞானம்,பேராசிரியர் பாண்டியராசன்,சேலம் செந்தில், வின்சென்ட் சந்திரசேகர்,அரியானூர் செந்தில்,கருப்பூர் சுரேசு, தும்பல் ரமேசு,தொளசம்பட்டி மணி, தம்மம்பட்டி சக்திவேல்,கொங்கனாபுரம் வணங்காமுடி, வாழப்பாடி ராம்குமார் மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நவலடி ஆகியோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்வின் இறுதியாக சீராளன் நன்றி தெரிவித்தார்.

முந்தைய செய்திஅமெரிக்காவில் நுழைய சீமானுக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
அடுத்த செய்திதிருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக மூவரை காக்கக்கோரி ஆர்ப்பாட்டம்