துப்பாக்கி சூட்டில் பலியான உறவுகளின் துயரத்தில் நாம் தமிழர் பங்கேற்ப்பு

129

கடந்த 11 ஆம் தேதி பெருந்தமிழர் தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் நடந்தகலவரம்,அதையொட்டி நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த உறவுகளின் இல்லங்களுக்கு 25/09/2011 சென்று நாம் தமிழர் கட்சியினர் அவர்களின் துயரத்தில் பங்கேற்றனர்,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடமைத்தொகையாக நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒறிங்கிணைப்பாளர் திரு.சீமான் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒவ்வொருவருக்கும்  ரூபாய் 25000 வழங்கினார்.

இறுதியாக பெருந்தமிழர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் சீமான் அவர்கள் மலர்வளையம் வைத்து உறுதிமொழி கூறி வீரவணக்கம் செலுத்தினார்.இவருடன் நாம்தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நாம் தமிழர் கட்சியினர் துயரத்தில் பங்கேற்ற துப்பாக்கி சூட்டில் பலியான உறவுகள் விவரம்:-

1 கணேசன்- பள்ளவராயனேந்தால்

2 வெள்ளைசாமி -காகனேந்தால்

3 செயபால் -மஞ்சூர்

4முத்துக்குமார் -சடயனேறி

5 பன்னீர் -வீராம்பல்

6 தீர்ப்புகனி -கீழகொடுமனுர்



முந்தைய செய்திவாச்சாத்தி தீர்ப்பு: அடித்தட்டு மக்களுக்கு எதிரான அநீதிகள் ஒழியட்டும்
அடுத்த செய்திஉறவுகளுக்கு வேண்டுகோள்…