பாராட்டிப் போற்றப்பட வேண்டிய நிதி நிலை அறிக்கை-சீமான்

29

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.

தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2011-2012 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏழை,எளிய அடித்தட்டு,நடுத்தட்டு,தொழில்துறை,பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை ஆகும்.பாராட்டிப் போற்றப்பட வேண்டிய இந்த நிதிநிலை அறிக்கையை நாம் தமிழர் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் பாராட்ட எண்ணற்ற அம்சங்கள் இருந்தாலும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை எடுத்துக்காட்டிப் பாராட்ட வேண்டியது முக்கியமாகும்.

*திருக்குறள்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் ஆகியவற்றை ஆங்கிலம்,அரபு,சீனம் ஆகியவற்றில் மொழிபெயர்த்து இணையத்தின் மூலம் திக்கெட்டும் பரப்பும் அரசின் முயற்சி மிகுந்த பாராட்டத்தக்க ஒன்று.

* ஈழத்தமிழர் அகதி முகாம்களில் வீடுகளையும்,அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு

*50 கோடி தொகையில் 15 தொழிற்பேட்டைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கிடு

*தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் 3 சதவீத வட்டியில் கடன் வழங்கும் திட்டம்.

*அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்தைப் புத்துயிர் ஊட்டும் வண்ணம் 18 மாவட்டங்களில் புதிதாக தலைமுனையங்களை நிறுவியும்,11 மாவட்டங்களில் தனியார் ஒத்துழைப்புடன் தலை முனையங்களை நிறுவும் அரசின் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று,

* பத்தாம் வகுப்பு,மேல்நிலைப்பள்ளி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, மாணவர்களின் நலனுக்காக அரசு புதிதாக வழங்க முடிவெடுத்துள்ள நிதி உதவித்திட்டம் கல்வி பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

*கிராமப்ப்புற மக்களின் நலன் கருதி அவர்களின் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனை .

*திருநங்கையர் நலனுக்காக அவர்கள் தொழில் தொடங்க 25 விழுக்காடு மானியத்தில் 15 லட்சம் கடன் உதவி,

போன்றவை அவர்களின் நலம் உயர்த்தும்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும் எண்ணற்ற கூறுகள் இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளன.இதனை நாம் தமிழர் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.

முந்தைய செய்திநாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகரூரில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வைக்கபட்டுள்ள பதாகைகள்