இன்று (16.08.11) செவ்வாய் அன்று தமிழீழ ஆதரவு வழக்கறிஞர்கள் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.