[படங்கள் இணைப்பு] மன்னார்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற சேனல் 4 இலங்கையின் கொலைக் களம் திரையிடல் மற்றும் விளக்க கூட்டம்.

29

மன்னார்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் – காணொளி கடந்த 02-08-2011 அன்று மன்னை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை வாசலில் பொதுமக்களின் பார்வைக்கு திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கு வழக்கறிஞர் வீரக்குமரன் அவர்கள் தலைமையேற்றார். வழக்கறிஞர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மக்கள் மருத்துவர் திரு. பாரதிச்செல்வன் ஈழ மக்களின் துயரத்தினை பிரதிபலிக்கும் வகையில் உணர்ச்சிப் பாடலை பாடினார். திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தென்றல் சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை வழக்கறிஞர். அ.நல்லதுரை ஆகியோர் கலந்துக் கொண்டு இன எழுச்சியுரை ஆற்றினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்று இந்நிகழ்வில் பங்கெடுத்து இன உணர்வெழுச்சி எய்தினர்.

முந்தைய செய்திகரூரில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வைக்கபட்டுள்ள பதாகைகள்
அடுத்த செய்திவேளாங்கண்ணியில் 05-08-2011 அன்று சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய அறப்போராட்டத்தின் காணொளி.