தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

31

20 /08 /2011 அன்று தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி முன்பு மாலை 6 மணியளவில் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப் பட்ட மூன்று அப்பாவிகளை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் செ. இசக்கித்துரை தலைமை வகித்தார். வழக்கறிஞர் சாத்தை கல்யாணகுமார், கரைவலை மாரியப்பன், மு.க. சேகர் , ந. தமிழரசன் , கோவில்பட்டி மா.புங்கன் , மொ. மகேசு, மாநில மகளிர் அணி பொறுப்பாளர் வெற்றிக்கொடி ஆகியோ முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி மாநில தலைமைப் பேச்சாளர் தொண்டைமான் புதுக்கோட்டை செயசீலன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து மாபெரும் கண்டன உரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் அலைமகன் என்ற பிரபு அவர்கள் தம் கண்டன உரையில் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக சாடி பேசிப் பதிலடி கொடுத்தார்.

புதுக்கோட்டை செயசீலன் அவர்கள் இராசீவ் கொலைப் பின்னணியில் காங்கிரசின் பங்கு மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தூக்குத் தண்டனையை தூக்கிலிடு… உண்மைக் குற்றவாளியை கண்டுபிடி…. பொய்க் குற்றம் சுமத்தாதே…… போன்ற முழக்கங்கள் ஒலித்தன…. ப.சிதம்பரம், சோனியா,சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியோர் தான் இராசீவ் கொலைக் குற்றவாளி அவர்களை தண்டிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டக் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் ம.ஆரி, வே.வேல்ராசு , ப.ம.இளையவன் பா.பாலா ,வே.சான்குனதுரை, திருநெல்வேலி பொறுப்பாளர் சக்தி மரபாகரன் செ.தனலிங்கம், திரேசுபுரம் இரசுகின், இர.செரால்டு, சாத்தை ஆரோண்டேவிட், சண்முகம்,புதுக்கோட்டை முத்துகிருட்டிணன், மு.இராசா, திருவை சுப்பையபாண்டியன் ,துரை, முத்தையாபுரம் கனகராசு, தினேசு, சுதர்சன் , கடல்சார்துறை சரவணன், வில்சன், ஆத்தூர் இலெனின், வாகை சக்திவேல், கயத்தாறு பாண்டி , திரேசுபுரம் இராசா, ரூபசு,பாசுகர் , புதியம்புத்தூர் கணேசன், செயபிரகாசு, பாரதி நகர் சுப்பையா , இராசா , சொட்டையன்தோப்பு வெயிலுமுத்து , வீரபாண்டியபுரம் பாக்கியரசு, அனல்மின் நகர் வடிவேல் , மு.கிருபா, தாளமுத்துநகர் சமையல் குமார், துறையூர் செந்தில், சந்திரகிரி முருகன், கோரம்பள்ளம் இராசா, கார்த்திக், பாத்திமா நகர் விநிபிராத், அந்தோணி , கரிசல்குளம் செல்வராசு, மீளவிட்டான் பாலா,முனியசாமி, கணேசன் காலனி இம்மானுவேல் , இராசா, ஆறுமுகநேரி மாரியப்பன், தமிழன், வைப்பார் மெர்வின், செல்லப்பா, சின்னமநிநகர் செல்லத்துரை வழக்கறிஞர் தமிழடியான், பொன்ராசு, இரகு ராமன் , பட்டியூர் குமார், கார்த்திக் , பிரையன்ட் நகர் சுப்பிரமணியன் எட்டையாபுரம் முத்தரசு, சோலை, விளாத்திகுளம் அகிலன், செந்தமிழன், உட்பட பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழார் கட்சி தோழர்கள் 400 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.செயசீலன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

முந்தைய செய்திஅறிக்கை-நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது டக்ளஸ் அனுப்பிய கூலிப்படைகள்- சீமான்
அடுத்த செய்திகுளத்தூர் மணி உரை www keepvid com