கரூர் 80 அடி சாலை யில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெறும் தீரன் சின்னமலை விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் – 6 அன்று மாலை நடை பெற உள்ளது .
மாலை 5 மணிக்கு தந்தை பெரியார், காமராசர் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கும்.
இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, கலைக்கோட்டுதயம், திலீபன், ஜெயசீலன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வை கரூர், கோவை, திருப்பூர்,ஈரோடை,சேலம்,நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கினைக்கின்றனர்.
நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டுள்ள இந்நிகழ்விற்கான பரப்புரை பதாகைகளில் சில..