[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

10

புதிய உத்வேகத்துடன் நடந்த வெள்ளகோவில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் அமைச்சர்கள் தொகுதி என்பதால் பொதுவாக திராவிட கட்சிகள் தவிர வெள்ளகோவிலில் எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. இச்சூழலில், நாம் தமிழர் பொதுக்கூட்டம் மக்கள் மத்தியில் மிகுந்தவரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

தேசியத்தலைவரின் பாதகைகள் மற்றும் துண்டறிக்கையால் வெள்ளகோவில் மிகுந்த பரபரப்பை அடைந்திருந்தது. கடைசிவரை காவல் துறை அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், சிறப்புரையாற்றிய திலீபன், ஈழத்தமிழர் படும் துன்பங்களையும், இந்திய அரசின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்திய போது பொதுக்மக்கள் கண்களில் கண்ணீர் வலிந்தது.

பேரா.கல்யாணசுந்தரம் ஆற்றிய உரையில், காங்கிரஸ் தமிழ் மண்ணிலிருந்து ஏன் வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்பதை மிகுந்த ஆதாரங்களுடன் ஆற்றிய உரையை வெகுமக்கள் கைதட்டி, ஆர்பரித்து வரவேற்றனர்.

அழகப்பன் தனது உரையில், மகாத்மா காந்தி படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டதும், ராஜீவ் காந்தி படுகொலையில்உடந்தையே இல்லாதவர்கள் சிறைப்பட்டதையும் “இந்திய அரசின் மனுநீதி“யை விளக்கினார்.

தோழியர்.குமுதவல்லி தனது உரையில், நாம் தமிழர் ஏன்? அதன் செயலும், விளைவும் என்ன என்பதை அழகுபட எடுத்துரைத்தார்.

கூட்டமுடிவில், மருத்துவர் இளங்கோ அனைவருக்கும் தனது வீட்டில் விருந்தளித்து உபசரித்தார்.

இக்கூட்டத்திற்காக களப்பணியாற்றிய முத்துார்.செந்தில், மனோஜ், வடிவேல்,பிரேம் ஆகியோரை திலீபன் பாராட்டினார்.

இக்கூட்டத்திற்கு ஊக்கமளித்த காங்கயம் பொறுப்பாளர்.யோகராசா, ரமேசு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு ஓய்வில்லாமல் பணியாற்றிய வெள்ளகோவில் அமைப்பாளர்.கோபாலகிருட்டிணன் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

வெள்ளகோவில் உட்பட்ட காங்கயம் தொகுதியில் காங்கிரஸ் விடியல்.சேகர் தோற்க்கடிக்கபட்டு நாம் தமிழரின் களப்பணியில் இந்நிகழ்ச்சி ஒருமைல்கல்லாக அமைந்தது.

இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.செல்வம், பாலா, பரமசிவம்,  கௌரிசங்கர், சண்முகசுந்தரம், இளைஞர் பாசறை தமிழன்வடிவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.