ராசீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி மதுரை நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

35

ராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய் என்று தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மதுரையின் முக்கிய இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.


தமிழக அரசே!

இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161ன் படி மாநில அரசின் சட்ட வழிமுறையை பயன்படுத்தி தூக்குத் தண்டனை சிறைவாசிகளாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகியோரை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய் !

வாழ்நாள் சிறைவாசிகளான நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகியோரை விடுதலை செய்!

“முன் விடுதலை செய்வதில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது” என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்து! – என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்து மதுரை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.