கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.அருண் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பினராக தலைமை அலுவலகத்திலிருந்து திரு. மு.பெ.பாசுகரன் கலந்துகொண்டார். மற்றும் இக்கூட்டத்திற்கு குறிஞ்சிப்பாடியில் இருந்து திரு.எழில் அமுதன், நெய்வேலி-யில் இருந்து திரு. இராசாசி, திரு. இரமேசு பாண்டி-யில் இருந்து திரு. மகேசு ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் இக்கூட்டத்திற்கு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில்
1. கடலூர் மேற்கு மாவட்டதில் ஒவ்வொரு பகுதிகளிலும் கிளைகள் உருவாக்குதல்
2. மாணவரணி உருவாக்குதல்.
3. கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்களின் கருத்தின்படி கல்லூரியின் 43 ஏக்கர் நிலம் சிலரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீட்டெடுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கபட்டது.
மற்றும் இக்கூட்டத்தில்
விருத்தாசலம் நகர ஒருங்கிணைப்பாளர்களாக
ம. சோசப்
விவேக்
துரைசெந்தில்
நகர மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களாக
நித்யானந்தம்
வீரமணி
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.