[படங்கள் இணைப்பு] சென்னை இராயபுரம் பகுதில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

28

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதில் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு கடந்த 03.07.11 அன்று நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம் நடைபெற்றது.

மாலை சுமார் 6.00 மணி அளவில் நிகழ்ச்சி தமிழின எழுச்சி பாடலுடன் துவங்கியது, பின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆவணக் காட்சி திரையிடப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் கண்டு பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர்.

நிகழச்சியின் அடுத்தகட்டமாக கரும்புலி மில்லர் அவருகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

அத்தனை தொடர்ந்து எட்வின் அவர்கள் துவக்க உரையாற்ற, வழக்கறிஞர் அறிவுச்செல்வன் அவர்கள் ராஜீவ் காந்திக்கு நடந்தது கொலை அல்ல அது மரண தண்டனை என்று சிறப்புரையாற்றினர். பின்னர் பேசி திரு அன்பு தென்னரசன் அவர்கள் இந்திய ராணுவ அதிகாரிகளால் சுட்டு கொல்லப்பட்ட சென்னை சிறுவன் தில்சனின் படுகொலை குறித்து கண்டும் கண்டனத்தை தெரிவித்தார்.மேலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு உலக தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவித்தார்.

திருமதி அமுதா நம்பி, இயக்குனர் ஐகோ, அவல் கணேசன், கவிஞர் பாலமுரளி வர்மண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந் நிகழ்விற்கு அருண் குமார் தலைமை தாங்கினார், இந் நிகழ்வை ஒருங்கிணைத்தவர் ஆனந்தராசு.