எதிர் வரும் 13-08-2011 அன்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வட்டம் 17, அண்ணா திடலில், கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள பொதுகூட்டதிற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருப்பதை முன்னிட்டு இக்கூட்டத்தை சிறப்பாக நடத்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மாநில நிர்வாக அமைப்பாளர் திரு.அன்பு தென்னரசு அவர்களும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறை திருமண மண்டப்பத்தில் 23-07-2011 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் இதற்காக சுவர் விளம்பரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் பணிகள் நிர்வாகிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ப்புக்கு : கி.ரமேசு 9443271995