தீரன் சின்னமலை விழா- கரூரில் வரும் ஆகஸ்ட் – 6 ஆம் தேதி செந்தமிழன் சீமான் பங்குபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

32

கரூர் 80 அடி சாலை யில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெறும் தீரன் சின்னமலை விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் – 6 அன்று மாலை நடை பெற உள்ளது .

மாலை 5  மணிக்கு தந்தை பெரியார், காமராசர் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கும்.

இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, கலைக்கோட்டுதயம், திலீபன், ஜெயசீலன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வை கரூர், கோவை, திருப்பூர்,ஈரோடை,சேலம்,நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கினைக்கின்றனர்.

முந்தைய செய்திஅறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை நிர்வாக அறிவிப்பு.
அடுத்த செய்திஅறிக்கை : ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – சீமான்.