சேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்

43

சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில், அய்யா சந்திரசேகரன்அவர்கள் முன்னிலையில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் சிவகுமார், ஓமலூர் பசுபதி, பனைமரத்துப்பட்டி வினோத், அம்மாபேட்டை பன்னீர் செல்வம், இடைப்பாடி சீராளன், அம்மாபேட்டை கண்ணன், சேலம் இணையம் சிவா, சிந்தாமணியூர் சுதாகர், ஆத்தூர் அருள்ராம், கெங்கவள்ளி ரமேசு , அத்தம்பட்டி பாண்டிராசன், மேட்டூர் மணிவேல், ஓமலூர் கதிர்வேல், தும்பல் ரமேசு, ஆகியோரும், உறுப்பினர்கள் அனைவரும்  திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சேலம் இடைப்பாடி பகுதி நாம் தமிழர் கட்சியின் போராளி ரமேசு அவர்கள் நோய்வாய்ப்பட்டு வீரமரணம் அடைந்தார். மாவீரர் ரமேசு அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

–  ராசிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆ.ஞா. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரையும் இதுநாள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தையே தண்டனை காலமாக கருதி மாநில அரசும் மைய அரசும் கருணையோடும் மனிதாபமானத்தோடும் அவர்களின் விடுதலைக்கு பரிந்துரையை நீதித்துறைக்கு சமர்ப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

–  சாதி, மதம் கடந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய மாவீரர் தீரன் சின்னமலை அய்யாவின் நினைவு நாளான ஆகத்து (3) ல் அவருடைய நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த அனைவரும் திரண்டு செல்வது எனவும் ஆகத்து (6) ல் கரூரில் நடக்கும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு திரளாக செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முந்தைய செய்திநாம் தமிழர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 24.7.2011 அன்று மாலை கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
அடுத்த செய்திதமிழக முதல்வருடன் நாம் தமிழர் சந்திப்பு