இந்தோனேசியாவில் கப்பலில் இருந்து இறங்க ஈழத் தமிழ் அகதிகள் மறுப்பு

12

நியூஸிலாந்துக்கு அகதிகளாக செல்லும் வழியில்  இந்தோனேசியா கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட 87 ஈழத் தமிழர்களும் தாம் பயணித்த கப்பலில் இருந்து இறங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பல் தற்போது இந்தோனேசிய டாங்ஜூங் பினாங் தளத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இது கடந்த சனிக்கிழமையன்று இந்தோனேசியாவின் பின்டான் தீவான ரினானுக்கு அருகில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் மறிக்கப்பட்டது.

இந்தநிலையில் கப்பலில் உள்ளோர் தமக்கு நியூஸிலாந்து செல்லவேண்டும் என்ற ஏந்திய வண்ணம் பலகையை நியூஸிலாந்து கொடிகளுடன் இருப்பதாக ரொயட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கே, இந்த அகதிகளை தாம் வரவேற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசிய சுதந்திர ஊடகவியலாளர் யூலி செபாரியின் தகவல்படி ஐக்கிய நாடுகள் தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் வரை தாம் கப்பலில் இருந்து இறங்கப்போவதில்லை என்று அகதிகள் தெரிவித்துள்ளனர்.

தாம் சட்டவிரோத குடியேறிகள் அல்லர். உண்மையான அகதிகள் என்று அகதிகளில் ஒருவரான ரோமன்ஸ் ராடன் தெரிவித்துள்ளார்.மற்றும் ஒரு அகதி, தமது குடும்பத்தினர் இலங்கையில் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் தாம் கப்பலில் இருந்து இறங்கினால் தாமும் கொல்லப்படும் அச்சம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.