23 மீனவர்களையும் இலங்கை இனவெறி அரசிடம் இருந்து மீட்கும் வரை ராமஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

17

இலங்கை இனவெறி கடற்படை பிடித்து சென்றுள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.

அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடந்தது.

யாகப்பா விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பெஞ்சின்கிளாஸ் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட் உள்பட 13 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

23 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்யும் வரையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்துபோன மீனவர் ஜெரோமியன் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முந்தைய செய்திஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பான் கி மூன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த செய்திசென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது!