முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு

15

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா அரசு முடிவு செய்துள்ளது. முதல்-மந்திரி உம்மன்சாண்டி, நீர்வளத்துறை மந்திரி பி.ஜே.ஜோசப், முல்லைப் பெரியாறு அணைத்திட்ட சிறப்பு அலுவலர்கள், மாநிலங்களுக்கிடையிலான நீர் ஆலோசனைக்குழு,

நீர்ப்பாசன இலாகா, வன இலாகா ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் இந்த திட்டத்துக்கான சிறப்பு வாகனம் வாங்குவது, அணைக்கான போதிய நிதி ஒதுக்குவது, பழைய அணை திட்டத்தை நிறுத்தி வைப்பது,

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது உள்பட பல விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிகின்றன .