நாம் தமிழர் ஆன்றோர் அவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

352

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமை செயலகத்தில் கூடியது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தியும் ராஜபக்சே கும்பலை போற்குற்றவாளிகளாக அறிவிக்க கோரியும் தமிழர்களின் சொத்தான கச்சதீவை மீட்பதற்கான நடவடிக்கைக்காகவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகின்ற 18 ம் தேதி சென்னையில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் இடம்பெற்றது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் திரு. சத்யராஜ், மணிவண்ணன் அய்யா அவர்கள், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் தீரன், திரு.செல்வபாரதி, திரு.அன்பு தென்னரசு, மூத்த வழக்கறிஞர் தடா.சந்திரசேகர், புகழேந்தி தங்கராசு, முருகு.இராசாங்கம், அறிவரசன் ஐயா, திரு.தங்கராசு, மேலும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.