கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 12.06.11 சிதம்பரம் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தீபன் அவர்கள் தலைமை தாங்கி பங்கேற்று கட்சி கட்டமைப்பு, நிர்வாக, ஒன்றியம், கிளை அமைக்கும் முறை குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்திற்கு சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. செ. புகழேந்தி வரவேற்ப்புரை ஆற்றினார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் திரு. மா. பிரபு, திரு. ரா.ச. மணி, ரா. ராமு, திரு.ஆ. வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள். கடலூர் நகர தளபதிகள் திரு. பிரபு, திரு. குப்புசாமி, திரு .சாமிரவி ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்கள்.