ஐ.நா பிரதிநிதிக்கு தடைவிதித்துள்ளது இலங்கை

27

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ இலங்கை வருவதற்கான அனுமதியை இரண்டாவது தடவையாகவும் அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூவை இலங்கைக்கு அழைத்து காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, உட்பட காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கூடிய இந்த அமைப்புகள் எடுத்துள்ளன.

37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சுதந்திரமான கருத்துக் கூறல் பரிவர்த்தனை அமைப்பு International Freedom Expession Exchange (IFEX) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவிற்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

முந்தைய செய்திஇந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை! – இலங்கை திட்டவட்டம்
அடுத்த செய்தி[காணொளி இணைப்பு] விகடன் செய்தி தளத்திற்கு செந்தமிழன் சீமான் அளித்த செவ்வி