அரசியல் தீர்வுக்கு இந்தியா எந்த நிர்பந்தமும் செய்யவில்லை – ராஜபக்சே

35

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இருந்து எவ்வித நெருக்குதலும் தமக்கு இல்லை என்று சிங்கள இனவெறியன் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளான். இதுகுறித்து பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் இன்று கூறுகையில்,

“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குமாறு இந்தியா மூலம் எனக்கு எந்த நெருக்குதலும் ஏற்படுத்தப்படவில்லை. 13-வது திருத்தம் தொடர்பாகவோ அல்லது 13 பிளஸ் தொடர்பாகவோ இந்தியாவிடம் இருந்து எந்த நெருக்குதலும் இல்லை.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரின் இலங்கைப் பயணம், வழக்கமான இருதரப்பு விவகாரங்கள் தொடர்புடையதே. “

இதன் மூலம் இவர்கள் அடிக்கடி தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசுகிறோம் என்று கூறிக்கொண்டு நம் வரிப்பணத்தில் இலங்கை சென்றுவருவது அப்பட்டமான பொய் என்று தெரியவந்துள்ளது. சிங்கள இனவெறி கடற்படையால் சுட்டுக்கொல்லப்படும் அப்பாவி தமிழக மீனவர்கள் பற்றி இவர்கள் பேசுவதாக சொல்வதும் இவ்வகை பொய்யே என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இலங்கை அரசு நடத்திய தமிழினப்படுகொலை குறித்து எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி ஆலோசிக்கவே இவர்கள் அடிக்கடி இலங்கை சென்று தங்களது இனப்படுகொலை கூட்டாளிகளை சந்திக்கின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் உடனிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ. எல்.பீரீஸ், ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் அரசு மீது போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கவில்லை என்றார். இனப்படுகொலை செய்த இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்பதையே இவ்வாறு பிரீஸ் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

முந்தைய செய்திதீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.
அடுத்த செய்திஇந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்