மே 18 அன்று வேலூரில் ஐ.நா போர் குற்ற விசாரணைக்கு ஆதரவாக மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 ஆண்டுகளாக தனிமை சிறையில் மரண தண்டனை கைதியாக வாடும் பேரறிவாளன் எழுதிய இரண்டு நூல்கள் செந்தமிழன் சீமான் அவர்களால் வெளியிடபடுகிறது.
1. தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்..
2. இலக்கியம் மாறுமா?
தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் நூலின் ஏழாம் பதிப்பு சீமான் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவருகிறது.