போரின் பின்னரும் சிறீலங்கா ஆபத்தான நாடாகவே உள்ளது: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு

14

சிறீலங்காவில் போர் நிறைவடைந்த பின்னரும் அங்கு வன்முறைகள் குறையவில்லை, அது ஆபத்தான நாடாகவே தற்போதும் உள்ளது என அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அது வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர் நிறைவடைந்த பின்னரும் சிறீலங்கா ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாகவே உள்ளது. சிறீலங்காவில் போர் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் குறைவடையவில்லை.

காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளும் அங்கு மேற்கொள்ளப்படுவதில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

ஈழம் இ நியூஸ்