தமிழின படுகொலை செய்த ராஜபக்சேவை போற்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென்றும், தமிழின படுகொலைக்கு துணைபோன இந்திய அரசை கண்டித்தும் ஈரோடு மாவட்டன் கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையம் எதிரில் 10-5-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பொதிகை சுந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். தாராபுரம் அழகப்பன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ராம இளங்கோவன் – பெரியார்.தி.க
மா.கந்தசாமி – மறுமலர்ச்சி .தி.மு.க
பாலு – புரட்சிகர.இளைஞர்.முன்னணி
பரமேஸ்வரன் – இந்திய.கம்யு
அலெக்ஸ் – விடுதலை சிறுத்தைகள்
ஐமன்னன் – புதிய தமிழகம் கட்சி
கோபால் – கொங்கு இளைஞர் அணி
சுப்பிரமணி -பாட்டாளி மக்கள் கட்சி
ஹசிம் – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
பிரபாகரன் – தேசிய முற்போக்கு தி.க
கணேசன் – சமத்துவ மக்கள் கட்சி
ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.