ஐ.நா போர்குற்ற அறிக்கையை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளவுள்ள உண்ணாநிலை போராட்டம்

32

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா மன்றத்தில் இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி   நாளை புதன்கிழமை  காலை 9  மணிமுதல் உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற உள்ளது .

ஓன்று கூடி போராடி இலங்கை மற்றும் இந்தியாவின் போர்குற்ற செயல்களை உலகுக்கு  அம்பலப்படுத்துவோம். இரண்டு லட்சம் தமிழர்களைக் கொல்ல ஆயுதம், பணம் மற்றும் பயிற்சி கொடுத்து,  இன ஒழிப்பு படுகொலைகளுக்கு துணை போனவர்களை தண்டிப்போம். இதுவரை  540 மீனவர்களை இழந்தும் அதற்க்கு காரணமான இலங்கை ராணுவத்திற்கு தார்மீக ஆதரவு கொடுப்பவர்களை கருவறுப்போம்.இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை கோருவோம்! ஒன்றாய் நின்று வென்றெடுப்போம்! அனைவரும் வருக!

இடம் : திருப்பூர் தொடர் வண்டி நிலையம் முன்பு

நேரம் : காலை 9 மணி

நாள்: 4-5-2011

முந்தைய செய்திஐ.நா அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ராசபாளையம் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திஒற்றுமையுடன் போராடி வணிகர்கள் வெற்றி பெற வேண்டும் – சீமான்