ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ராசபாளையம் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.

27

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இராசபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் 2-5-11திங்கள்கிழமை அன்று வை.தமிழினி தலைமையில் இலங்கை அரசைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை  அரசின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்திஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் சங்கர் முன்னிலை  வகித்தார்.மதிவாணன்,சீனி வாசன் ஆகியோர் விசாரணையை வலியுறுத்தி  பேசினார்கள். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இராவணன்,சக்திவேல்,சந்திர சேகர், கார்த்திக், மகேசு, கணிராசு, சோபன்பாபு, திருமலைவாசன், ராமர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் வீரபாண்டி,கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இராசபாளையம் கண்ணன் செய்திருந்தார்.