ஈழத்தமிழர் பிரச்சனையும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்.

106

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஈழத்தமிழர் பிரச்னையும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் என சொல்லலாமா?

“நிச்சயமாக சொல்லலாம். நமது சொந்தங்கள் படுகொலை செய்யப்பட காலத்தில் கலைஞர் ஆடம்பர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது மறக்ககூடியதா? படுகொலையைத் தடுத்து நிறுத்த முற்படாமல் பாசாங்கு காட்டிய அவரை எப்படி மறக்க முடியும்? ‘ஈழத்தமிழருக்கு துரோகம் செய்த காங்கிரசையும், துணை போன தி.மு.க வையும் தோற்கடிப்பேன் என சூளுரைத்த சகோதரர் சீமானின் கடுமையான முயற்சியும் அந்தக் கூட்டணி வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த திரு. சரத்குமார் அவர்களுக்கு நன்றி.

முந்தைய செய்திசென்னை புளியந்தோப்பில் 31-5-2011 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி மாவட்டத்தில் சீமான் அவர்கள் தொடங்கிவைத்த முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான கபாடி போட்டி.