இந்தியாவை மிரட்டும் இலங்கை – சீனா செல்கிறார் பீரீஸ்

38

இந்தியாவை தனது பக்கம் திருப்புவதற்கு இலங்கை அரசு மெற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்தியாவை மிரட்டும் திட்டத்துடன், இலங்கை அரசு வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று (23) சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாள் பயணமாக சீனா செல்லும் பீரீஸ் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜேச்சியுடன் இரகசிய ஆலோசனை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலேயே பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளபோதும், மேலதிக தகவல்களை வழங்க அது மறுத்துவிட்டது.