ஆடு நனைகின்றதென ஓநாய் அழுகின்றது – தமிழக காங்கிரஸ் மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

25

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள இனவெறி ராணுவத்தால் சுட்டுக் கொலல்ப்படுவதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சென்னையில் சிறிலங்கா தூதரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட நாடகம் ஒன்றை இன்று நடத்துயது.

540 மீனவர்களுக்கு மேல் கொல்லப்பட்டபோதும் இலங்கை அரசை ஒரு கண்டனம் கூட செய்யாத தமிழக காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

ஏன் இந்த நாடகம்?

தமிழக காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ள தங்கபாலு அவர்கள் இதுநாள் வரை தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் பற்றி வாய்திறந்ததாக வரலாறுகளை நாம் இதுவரை கேட்டதில்லை. தமிழக காங்கிரசு கட்சிக்கு உள்ளேயே அவருக்கு எதிர்ப்பு வலுப்பெற்று இருக்கிறது.  கட்சி தலைவர் சோனியா வரை புகார் சென்றுள்ளது. இன்னும் இரண்டொரு நாளில் அவரது பதவி பறிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. கட்சியில் இருந்தே நீக்கவும்படலாம். இதை அடுத்து தன்னையும் தன் பதவியையும் காப்பாற்றிக்கொள்ள இன்று தமிழக மீனவர்களுக்கு ஆதரவு நாடகம் நடத்தியுள்ளார். “மீனவர்கள் படுகொலையை கண்டித்ததால் தான் பதவியை இழந்தேன்” என்று கூட தங்கபாலு சொல்லிக்கொள்ளலாம். அவர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திகொண்டிருந்த இடத்தின் அருகிலேயே தங்கபாலுவின் உருவபொம்மை காங்கிரசின் எதிர் கோஷ்டியினர் எரியூட்டப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற 4 தமிழக மீனவர்கள் படுகொலையை பற்றி இன்றுவரை மத்திய காங்கிரஸ் அரசும் தமிழக கருணாநிதியின் அரசும் திருவாய் மலரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் அலுவலகத்திற்கு தமிழக முதல்வரிடம் இருந்து தந்தியோ கடிதமோ கூட இந்தமுறை கிடைக்கபெறவில்லை என்பதாக தெரிகிறது.

முந்தைய செய்திகுற்றுயிரும் குலையுமாக இருந்த பெண்களைக் கூட விட்டுவைக்காத இராணுவம் !
அடுத்த செய்திSri lanka “war crime” is srebrenica moment – channel 4