[புகைப்பட தொகுப்பு இணைப்பு] திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை.

40

நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வரும் காங்கிரசுக்கு எதிரானபரப்புரையில் 1-4-2011 அன்றுவெள்ளிக்கிழமைஅன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை,பேராவூரணி,பொன்னமராவதி ஆகிய சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியதாவது :

காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்து வரும் தமிழின விரோதபோக்கிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்த சிங்கள இனவெறி அதிபர் மகிந்த ராஜபக்சேவை பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் அரங்கேறிய காமன்வெல்த் விளையாட்டு போட்டியை தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்து தமிழர்களின் உணர்வை கொச்சைபடுத்தியுள்ளது. தமிழக  மீனவர்களின் படுகொலையை கண்டித்து ராஜபக்சேவிற்கு ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்காத தமிழின விரோத காங்கிரசு அரசு இப்போது எந்த முகத்தை வைத்து கொண்டு தமிழ் மக்களிடையே ஓட்டு பிச்சை எடுக்க வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தான் தமிழினத்தின் பேரெழுச்சி என்றார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதுதான் நாம் தமிழர் கட்சியினுடைய முதன்மைக் கொள்கை என்றும் அதை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தலைவர்களே செய்து வருவதால் இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்தார்.

செந்தமிழன் சீமான் அவர்களை தொடர்ந்து இந்நிகழ்வில் அறிவரசன் அய்யா, தமிழர் அரப்பா,நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மதுரை வெற்றிக்குமரன்,தஞ்சை நல்லதுரை, பட்டுகோட்டை சக்திவேல்,புதுகோட்டை ஜெயசீலன்,இயக்குனர் செல்வபாரதி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பாளர் கலந்து கொண்டனர்.செந்தமிழன் சீமான் அவர்களின் கருத்துச் செறிந்த பேச்சைக் கேட்க ஏராளமான பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடியிருந்தனர்.

முந்தைய செய்திமும்பை நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் நள்ளிரவில் கைது
அடுத்த செய்திஇன்று மாலை தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.