போர்க்குற்ற விசாரணைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் தடையாக இருக்கக் கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்

27

நிபுணர் குழு அடிப்படையிலான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் தடையாக இருக்கக் கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.அவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதானது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தடையாக அமைந்து விடும் என்பதாக உலகின் முன்னணி மனித உரிமைகள் கண்காணிப்பகமான ஹ்யூமன் ரைட்ஸ் வொட்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே நிபுணர் குழு சிபார்சு செய்துள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த சீனாவும், ரஷ்யாவும் தமது ஆதரவை வெளிப்படுத்த  வேண்டும்.

மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், மனித உரிமைக்கவுன்சில் மட்டுமன்றி பொதுச்சபையின் அங்கத்தவர்களாக உள்ள அனைத்து நாடுகளும் நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க  வேண்டும் என்றும் ஹ்யூமன் ரைட்ஸ் வொட்ச் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆயினும் இந்த வேண்டுகோள் குறித்து இதுவரை சீனாவோ ரஷ்யாவோ எதுவித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.