[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

44

பட்டுக்கோட்டையில் ராசபக்சேவை போர் குற்றவாளி என அறிவித்து சர்வேதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம்தமிழர் கட்சி தஞ்சாவுர் தெற்கு மாவட்டம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் (இந்திய கம்னிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, பெரியார் தி.க,  தமிழ்த் தேச பொதுவுடமை கட்சி, தமிழக மனித உரிமை கழகம்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .சிங்கள இன வெறியன் போர்குற்றவாளி ராஜபக்சேவைஐ.நா.மன்றம் தண்டிக்ககோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சக்திவேல் பேசும்போது உள்ளாட்சி மன்றங்களில் திர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கும் அய் .நா வுக்கும் அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் பழ.சக்திவேல் தலைமை வகிக்க கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி அ.நல்லதுரை,  பேராவுரணி செகநாதன், மதுக்கூர் ப.மணிகண்டன்,உரத்தநாடு லெனின், தஞ்சை ராம்குமார், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமார், முத்துபேட்டை செல்வம், அனைகாடுதேவராசன்,இந்திய கம்னிஸ்ட்கட்சி சி.பக்கிரிசாமி, பாலசுந்தரம் பி.ஆர்.நாதன்,ரோசா.ராசசேகரன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் முரளிகணேஷ்,   சூரை.சண்முகம், தமிழ் தேச பொதுவுடமை கட்சி, ஆசிரியர் வெ.ராசேந்திரன் வைகறைதமிழக மனித உரிமை கழகம் அரங்க .குணசேகரன், ஆறு.நீலகண்டன்,  பெரியார் தி.க திருவேங்கடம், உள்பட 200  க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர் .

முந்தைய செய்திநீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சிறீலங்கா உயர் நீதிபதி
அடுத்த செய்திதமிழர்களுக்கு எதிராக தொடர்கிறது இந்தியாவின் பச்சை துரோகம் !