தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக, வெற்றி பெற்ற நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அலைமகன் என்ற தா.மி.பிரபு அவர்களுக்கு தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்தில் (05.04.2011)இன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வின் போது தூத்துக்குடி வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், வியாபார பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். நாம் தமிழர் கட்சித் தோழர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசை முழங்க தோழர் அலைமகனுக்கு ஆளுயர மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும், பட்டாசு கொளுத்தியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தொடர்ந்து மட்டக்கடை சந்திப்பில் உள்ள சட்ட மாமேதை அன்னல் அம்பேத்கார் திரு உருவ சிலைக்கு தோழர் அலைமகன் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் பலர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சி தோழர்கள், நகர அமைப்பு, இளைஞர் அமைப்பு என பல்வேறு அமைப்பின் கீழ் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.