தமிழ்க்கொடி வழி இதழில் வெளிவந்துள்ள கட்டுரை – சீமான் தலைமை ஏற்போம்

162
தமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை:

சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பபிள்ளைபிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.

‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர்குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோது   தம உயிரைப் பற்றி எண்ணாமல், தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு வந்தார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேடை மேடையாய் சென்று முழங்கினார். விளைவு:? பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.

கனடாவில் சென்று முழங்கிய போது அனாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இனல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி, மதங்களை கடந்த இவர், “தமிழினத்து துரோகிகளை” வெளிச்சம் போட்டு காட்டினார். தன இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார். ” இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க, தமிழகத்தில் ஒரு கட்சி இருந்திருந்தால், தமிழினப்படுகொலையையும்,தடுத்திருக்கலாம்! தமிழீழமும் மலர்ந்திருக்கும்! என்றெண்ணி, தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில், புலிக்கொடியேந்தி, “நாம் தமிழர்” கட்சியை துவங்கினார்.

“இருப்பாய் தமிழா! நெருப்பாய்!!”  என தமிழர்களை தட்டி எழுப்பினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை நிர்வாணப்படுத்தி, உடைமைகளை சேதப்படுத்தி, அடித்து உதைத்து,சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களன். சில மாதங்களுக்கு முன்பு கூட, வேதாரணியத்தில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டார். “என் சகோதரனை எப்படிடா அடிப்பாய்….? என் தமிழ்ச் சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே…? இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் =, சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்….? ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ தவறாக பயன்படுத்தப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு. இந்த சட்டத்தை ரத்து செய்து வெளியே வந்தார்.

இன்று, ‘ தமிழின துரோகி’ காங்கிரசை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறார். இவரை கொள்ள சதி திட்டம் தீட்டுவதாகவும் செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவந்து கொடிருக்கிறது.பலரும் இவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அன்று,இந்திய தேசிய விடுதலைக்காக சுபாஷ் சந்திர போஸ் ,ஹிட்லரிடம் உதவி கேட்டாரே ஏன்….? வழி முரண்பாடாக இருந்தாலும், நோக்கம் புனிதமானது. அது போல தான், காங்கிரசை ஒழிக்க, தற்போது அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டிய இக்கட்டான, இழிவான நிலையில் உள்ளோம் என்பதால் இவர், அ.தி.மு.க வை ஆதரிக்கிறார்.மற்றபடி, பணம், பதவி, புகழ்,இவற்றிற்கு எல்லாம் மயங்குகிற ஆள், இவர் இல்லை. பணத்தை எதிர்பார்த்து சம்பாதித்து இருக்கலாம்.” வருமானத்தை விட இனமானமே” பெரிது என அதனை விடுத்து இனத்திற்காக போராட வந்துள்ளார் .ஏன் என்றால்………….?  இவர்……! பிரபாகரனின் தம்பி………..!!!!!

முந்தைய செய்திதலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல் – இலங்கை கடற்படை கொடூரம்.
அடுத்த செய்திBoyle reacts to UN report: “Creating Tamil Eelam, the only remedy”