கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணல்அம்பேத்கார் 121 ஆவது பிறந்த தின நிகழ்வு.

94

கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 121 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் மேம்பாலம் அருகே  உள்ள அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்கறிஞர்.மணி செந்தில் என்ற திலீபன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட துணை அமைப்பாளர் நாதன் , கும்பகோணம் நகர அமைப்பாளர்கள் ரகமதுல்லா என்ற தமிழ் வேந்தன், பிரதீப், இளைஞர் பாசறை நகர அமைப்பாளர் வீரப்பன் உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்திவரலாறாய் வாழ்பவர் – பாபாசாகேப் அம்பேத்கர்
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி கண்டன ஆர்ப்பாட்டம்