கடையநல்லூரில் தமிழ்உணர்வாளர்கள் மீது காங்கிரஸ் தாக்குதல்.

31

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக நிற்கிறார்.

நேற்று மாலை கடையநல்லூரில் மக்களிடையே காங்கிரசின் துரோகங்களை பரப்புரை செய்துவந்த அய்யா அறிவரசன் அவர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டார். பேராசிரியரும், தமிழ் உணர்வாளருமான அய்யா அறிவரசன் அவர்கள் போருக்கு முன்னர் தேசியதலைவர் பிரபாகரன் அழைப்பின் பேரில் ஈழம் சென்று தமிழ் மக்களுக்கு தமிழ் இலக்கியம் கற்றுகொடுத்தவர். மற்றொரு தோழர் புருசோத்தமன் என்பவரை தாக்கி அவரிடம் இருந்த ஒலிபெருக்கி பிடுங்கி நடுரோட்டில் உடைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். அப்போது சில மீட்டர் தொலைவிலேயே அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ல் பிரசாரம் மேற்க்கொண்டிருந்தார். இவரின் தூண்டுதலின் அடிப்படையில் இந்த தாக்குதல் அமைந்ததாக அறியப்படுகிறது.

நாம்தமிழர் தோழர்கள்,  சீமானின் பிரச்சாரம் மற்றும் தமிழ்தேசிய ஆதரவாளர்கள் களப்பணி காங்கிரஸை பெரிதும் ஆட்டம் காணவைத்து இருந்தது. முக்கியமாக சீமானின் பொதுகூட்டங்கள் இவர்களின் கனவை தகர்த்து இருக்கிறது. இதை கண்கூடாக பார்க்க முடிந்தது என காங்கிரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டுள்ள மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  இயலாமையின் உச்சத்திலிருக்கும் காங்கிரஸை கருவறுக்க இது நல்ல சமயம்.களப்பணியாற்ற மேலும் தோழர்கள் முன்வரவேண்டும். அணைத்து தோழர்களும் முடிந்த அளவில் களப்பணியாற்றினால் வரலாறு படைக்க முடியும் என்பது தெரிகிறது. மொழிப்போருக்கு பிறகு தமிழகம் காங்கிரஸை துடைத்து அழிக்க காத்து இருக்கிறது என தெரிவித்தார்.