நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விசாரணைப் பொறிமுறையொன்றைஉருவாக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை இலங்கைஅரசாங்கம் நிராகரித்துள்ளது.இந்த நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எவ்வித பதிலையும் அளிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகளின்செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குமாறு இலங்கைஅரசாங்கத்திடம் கோரியிருந்தார். இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கபதற்கு சுலமாக இருக்கும் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.