இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா பயணம்

21

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே மிகவும் இரகசியமான முறையில் அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை அவர் மிகவும் இரகசியமான முறையில் விமான நிலையத்தை அடைந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை அது பற்றிய தகவல்கள் ஜனாதிபதியைத் தவிர யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் அமெரிக்க அரசின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது போன்ற விடயங்கள் குறித்து அவர் அமெரிக்காவில் தனக்கு நெருக்கமான அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் அவரது விஜயம் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளும் கலந்தாலோசனைகள் என்பன குறித்த விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படமாட்டாது என்று ஈழ இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்திஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு
அடுத்த செய்திஇலங்கை பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது – த இந்தியன் எக்ஸ்பிரஸ்