குடிமகன் பாட்டு! – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்

52
குடிமகன் பாட்டு! – கவிஞர் காப்பிராயன்

தேர்தல் அறிக்கை படிச்சதுமே
தெம்பு கூடுது…
டாஸ்மாக்கில் டபுள் மடங்கா
சேல்ஸு ஏறுது!

இலவசமா எல்லாமே
இனிமே கெடைக்குண்டா…
எதுக்கு வேல பாக்கணும் நீ
ரிஸைன் பண்ணுடா!

கிரைண்டர் மிக்சி நம்மளுக்கு
அரைக்கத் தர்றாங்க…
ஸ்பெக்ட்ரத்தை மாவில் போட்டு
மறைக்க வர்றாங்க!

இலவசமா அரிசி கூட
கெடைக்கப் போவுதாம்…
வேகவைக்க கேஸ் அடுப்பும்
ஜோடி சேருதாம்!

அறுபது வயசு ஆகலையேன்னு
கவலை பொறக்குது…
ஓசி பஸ்ல போக முடியாது
என்ன பண்றது?

காலேஜுல சேரலாம்னா
நாப்பது வயசுடா…
லேப்டாப்பு கெடைக்காது
ரொம்ப லாஸுடா!

மென்டல் ஆஸ்பத்திரி மதுரையில
தெறக்கப் போறாங்க…
தோக்கறவங்க அதுல வந்து
படுக்கப் போறாங்க!

தேவையெல்லாம் ஃபிரியாவே
குடுக்கப் போறாராம்…
ஐயா எப்படி இந்தக் கடனை
அடைக்கப் போறாராம்?

இலவசத்தில் ஒண்ணு ரெண்ட
ஸ்டாப் பண்ணுங்கப்பா…
நாங்களும் கொஞ்சம் வாங்கிக்கிறோம்
வேல குடுங்கப்பா!

நன்றி

தேர்தல் விகடன்.காம்

முந்தைய செய்திதமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம் !!! அரசியல் யுத்தம் !!!
அடுத்த செய்திseeman press meet