ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க பிரிவினர் அறிக்கை.

13
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெற்ற ஊழல் பணத்தை ஹவாலா மூலம் அயல் நாடுகளுக்கு கடத்தி சென்றுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பரிவினர் தெரிவித்துள்ளனர். 2ஜி அலைக்கற்றையை சந்தையில்  அதற்குரிய மதிப்பை காட்டிலும் குறைந்த விலையை நிர்ணயித்து வழங்கப்பட்டதால் மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தனிக்கையாளர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஊழல் பணம் ஹவாலா மூலம் அயல் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். மேலும் ஹவாலா பரிவர்த்தை பெரும்பாலும் மொரிசியஸ் நாட்டின் வழியாக நடந்ததாகவும் அமலாக்க பரிவினர் தெரிவித்துள்ளனர்.2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக 31 நிறுவனங்களை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.