இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவுயென செய்திகள் தெரிவிக்கிறது.
வரும் மே மாதம் 31 ம் நாளில் இருந்து ஜுன் மாதம் 2 ஆம் நாள் வரையிலும் “பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவம்” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள பாதுகாப்பு படைத்தரப்பின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 54 நாடுகளுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அழைப்புக்களை அனுப்பியுள்ளது.
ஆனால் யப்பான் நாட்டின் சட்ட விதிகளின் பிரகாரம் அது இராணுவ விழாக்களில் கலந்துகொள்ள முடியாது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இந்த விதி அங்கு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் இந்த மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.