[படங்கள் இணைப்பு]12-3-2011 அன்று வாணியம்பாடியில் நடைபெற்ற வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.

80

வேலூர் கிழக்கு மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த 12-3-2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத்தென்னரசன், தலைமை கழக பேச்சாளர்கள் புதுக்கோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன்,அமுதா நம்பி,வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சௌந்தரராசன், ராசா,ஆறுமுகம்,சிவா,சீனிவாசன்,மற்றும் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதை தொடர்ந்து நடைபெற்ற நாம் தமிழர் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.