கடந்த 20-03-2011 அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு:
தமிழ்திரு. தமிழப்பன் அவர்கள் தமிழர் வரலாறு, தமிழர் வீழ்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்,தமிழ்திரு.வீர பாண்டியன் அவர்கள் தமிழர் தேசியம் ஏன் தேவை என்ற தலைப்பில் உரையாற்றினார், செயராசு அவர்கள் நடப்பு தமிழர் விரோத அரசியல் குறித்து தோழர்களிடையே எடுத்துரைத்தார்.
வரும் தேர்தலில் காங்கிரசை வீழ்த்த தோழர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டது. பரப்புரைக்கு தோழர்களின் இயன்ற பொருளியல் பங்காளிபு கேட்கப்பட்டது.(உத்தேச தொகை உரு. 45000 ), கோபி பொது கூட்ட வரவு செலவு அறிக்கை மீது கலந்தாய்வு, இக்கூட்டத்திற்கு கோபி நகர ஒருங்கிணைப்பாளர் பொதிகை சுந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசு,விஜயசங்கர்,விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாரதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நாம் தமிழர்
ஈரோடை மாவட்டம்