[படங்கள் இணைப்பு] நேற்று விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக்கோரி நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கம்.

21தமிழக காவல்துறை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடுத்துவதை தடை செய்ததை எதிர்த்து இயக்குனர் புகழேந்தி தங்கராசு அவர்களால் தொடரப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறில்லை என நீதிபதி சந்துரு அவர்கள் வைகோ அவர்களின் வழக்கை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கியதை அடுத்து கருத்துரிமைக்களம் ஏற்ப்பாட்டில் விடுதலைப்புலிகள் புலிகள் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி 30-3-2011நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பனகல் மாளிகை அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அய்யா நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, தோழர் தியாகு, கவிஞர் தாமரை, உட்டப்பட ஏராளமான தமிழ் இளைஞர்கள், உணர்வாளர்கள் கூடி விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கையப்பம் இட்டனர்.

முந்தைய செய்தி[புகைப்பட தொகுப்பு இணைப்பு] நேற்று 30-03-11 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்
அடுத்த செய்திபாபநாசம் தேர்தல் பரப்புரை 31-3-2011