[படங்கள் இணைப்பு] கனடாவின் டொராண்டோ நகரில் 12.03.11 அன்று “நாம் தமிழர்” தொடங்கப்பட்டு அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

51

கனடாவில் 12.03.11 அன்று “நாம் தமிழர்” துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வில் தொடக்கமாக தமிழ் ஈழ தேசத்தையும் அதன் மாவீரகளையும் போற்றும் வகையில் பாடல்கள் இசைக்கப்பட்டது, பின் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக சென்ற பால் நியூமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரை தொடர்ந்து தமிழர் சிவதாசன் அவர்கள் நாம் தமிழர் கனடாவில் தொடங்கப்படத்தின் நோக்கம் குறித்தும் அதன் கொள்கைகள்,செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அவரை தொடர்ந்து தமிழர் பக்கியராசன், மற்றும் தமிழர் சேதுபாபா உரையாற்றினார்.

இறுதியாக தமிழகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் நாம் தமிழர் கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கனடாவில் நாம் ஆரம்பிக்கப்பட்டுள்ள “நாம் தமிழர்” க்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.